11 July 2012

உளவியல் ரீதியாக நீங்கள் எதிர்கொள்ளும் பிரிச்சினைகள் குறித்த புரிந்துணர்வுக்கு ...

தோழர்களே.. வணக்கம்.  
நாம் கலந்து பேச ஏற்படுத்திய பக்கம் இது. இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள்  ஏராளம். ஆனந்தத்தில் தொடங்கி சோகத்தில் முடியும் சம்பவங்கள் நமது அனுபவங்களாகின்றன. நவீனம் நம்மை வெகுவாக ஏமாற்றிவிட்டது. குடும்பம், சமுகம், நட்பு, காதல், இல்லறம், வணிகம் என எல்லாத் தளங்களிலும் உறவுமுறைகள் சிக்கலாகி வருகின்றன. இயல்பு வாழக்கை இயந்திரம் ஆகிவிட்டது. நவீன மனிதனின் உடல் வாழ்வு, உள வாழ்வு, சமுக வாழ்வு, சமய வாழ்வு யாவும் நிறைவாக இல்லை. இவற்றில் உளவாழ்வு இரகசியமானது. எந்தளவுக்கு பாதித்தது என்று ஒருவர்  சொன்னால் அன்றித் தெரியாது. வெளிப்படையாக நம் உளக் குறைகளைச் சொல்லமாட்டோம். 
 உடல் நோய் போல் உள  நோயும் இயல்பானதே என்று நாம் நினைப்பதில்லை. உள மருத்துவரிடம் செல்பவர்  எல்லாம் பித்தர்  அல்லர். எனவே உளப் பிரச்சினை இயல்பானதே. அதைத் தீர்க்க வேண்டியது நம் பொறுப்பு  பேசாத பிரச்சினைகள் குணமாகாது. இது மன அழுத்த யுகம். பேசுங்கள்.. உங்கள் பிரச்சினைகளுக்கு ஃப்ராய்ட் யூங் லக்கான் முதலிய உளப்பகுப்பாய்வாளர்கள் என்ன தீர்வு வைத்துள்ளனர். இந்தியத் தத்துவம் என்ன கூறுகிறது.   கேளுங்கள். உங்கள் மறதி முதல் மரண பயம் வரை, கனவு முதல் காதல் வரை, விதி முதல் முக்தி வரை, கர்மா முதல் கடவுள் வரை இன்னும் இன்னும் கேளுங்கள். தெரிந்ததைச் சொல்வேன்.. தெரிந்துச் சொல்வேன்.. கேளுங்கள்.  உளவியல் ஆன்மிகம் தத்துவம் தொடர்பான பொது  ஐயங்களையும் கேட்கலாம் . கேள்வி கேட்கக்  கீழ் உள்ள  கேள்வி பதிலைச் சொடுக்கவும். தமிழில் தட்டச்சு செய்ய  http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/  பயன்படுத்தவும். மின்னஞ்சலிலும் அனுப்பலாம். tptravi@yahoo.co.in  மொத்தக் கேள்வி பதில்களைப்  படிக்க வேண்டின் கீழ் உள்ள   கேள்வி பதிலைச் சொடுக்கவும்.