11 July 2012

உளவியல் ரீதியாக நீங்கள் எதிர்கொள்ளும் பிரிச்சினைகள் குறித்த புரிந்துணர்வுக்கு ...

தோழர்களே.. வணக்கம்.  
நாம் கலந்து பேச ஏற்படுத்திய பக்கம் இது. இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள்  ஏராளம். ஆனந்தத்தில் தொடங்கி சோகத்தில் முடியும் சம்பவங்கள் நமது அனுபவங்களாகின்றன. நவீனம் நம்மை வெகுவாக ஏமாற்றிவிட்டது. குடும்பம், சமுகம், நட்பு, காதல், இல்லறம், வணிகம் என எல்லாத் தளங்களிலும் உறவுமுறைகள் சிக்கலாகி வருகின்றன. இயல்பு வாழக்கை இயந்திரம் ஆகிவிட்டது. நவீன மனிதனின் உடல் வாழ்வு, உள வாழ்வு, சமுக வாழ்வு, சமய வாழ்வு யாவும் நிறைவாக இல்லை. இவற்றில் உளவாழ்வு இரகசியமானது. எந்தளவுக்கு பாதித்தது என்று ஒருவர்  சொன்னால் அன்றித் தெரியாது. வெளிப்படையாக நம் உளக் குறைகளைச் சொல்லமாட்டோம். 
 உடல் நோய் போல் உள  நோயும் இயல்பானதே என்று நாம் நினைப்பதில்லை. உள மருத்துவரிடம் செல்பவர்  எல்லாம் பித்தர்  அல்லர். எனவே உளப் பிரச்சினை இயல்பானதே. அதைத் தீர்க்க வேண்டியது நம் பொறுப்பு  பேசாத பிரச்சினைகள் குணமாகாது. இது மன அழுத்த யுகம். பேசுங்கள்.. உங்கள் பிரச்சினைகளுக்கு ஃப்ராய்ட் யூங் லக்கான் முதலிய உளப்பகுப்பாய்வாளர்கள் என்ன தீர்வு வைத்துள்ளனர். இந்தியத் தத்துவம் என்ன கூறுகிறது.   கேளுங்கள். உங்கள் மறதி முதல் மரண பயம் வரை, கனவு முதல் காதல் வரை, விதி முதல் முக்தி வரை, கர்மா முதல் கடவுள் வரை இன்னும் இன்னும் கேளுங்கள். தெரிந்ததைச் சொல்வேன்.. தெரிந்துச் சொல்வேன்.. கேளுங்கள்.  உளவியல் ஆன்மிகம் தத்துவம் தொடர்பான பொது  ஐயங்களையும் கேட்கலாம் . கேள்வி கேட்கக்  கீழ் உள்ள  கேள்வி பதிலைச் சொடுக்கவும். தமிழில் தட்டச்சு செய்ய  http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/  பயன்படுத்தவும். மின்னஞ்சலிலும் அனுப்பலாம். tptravi@yahoo.co.in  மொத்தக் கேள்வி பதில்களைப்  படிக்க வேண்டின் கீழ் உள்ள   கேள்வி பதிலைச் சொடுக்கவும்.




18 comments:

  1. எனக்கு மறதி அதிகமாக உள்ளது. இதனால் பல பொருள்களை இழந்து விட்டேன். மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை. மறதி போக்க ஏதேனும் வழி உள்ளதா?
    - தீபா

    ReplyDelete
  2. இயற்கை தந்த கொடைகளில் மறதியும் ஒன்று. மனம் ஒரு சுழல் பொறி. நினைவு, மறதி எனச் சுழன்று கொண்டிருக்கும். பெரும்பாலும் மறதியால் தான் நாம் நிம்மதியாக வாழ்கிறோம். எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள மனதில் இடம் இருக்காது. அப்படியே இருந்தாலும் பேண முடியாது. சிலருக்கு மறதி அதிகமாகத் தோன்றும். உண்மை அதுவல்ல. வேறு விஷயங்களில் மனம் அதிகமாக ஈடுபட்டுள்ளது என்று பொருள். தேவையல்லாதவற்றை மனம் தக்கவைத்துக் கொள்வதில்லை. கணக்கு ஃபார்முலா மறந்து விடுகின்றது என்றால் கிரிக்கெட் டேட்டா அல்லது சினிமா செய்திகள் அவனிடம் நினைவில் இருக்கும். சிக்கல் என்னவென்றால் எது முக்கியம் என்று மனம்தான் முடிவு செய்யும். உங்களிடம் வைத்த பொருள் நினைவுக்கு வராது. ஆனால் சமையல் பொருள்கள் நன்கு நினைவுக்கு வரும். மெய்தானே? மற்ற பொருளை மறக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஒரு பயிற்சி. பொருளை வைக்கும்போது மனம் கொண்டு வைக்கவும். அதாவது இந்த பேனாவை அலமாரியில் இரண்டாவது அடுக்கில் ஓரத்தில் வைக்கிறேன் என்று எண்ணவோட்டம் விட்ட வண்ணம் பேனாவை வைக்கவும். பிறகு ஐந்து முறை மனனம் செய்யவும். அப்புறம் பாருங்கள் பலநாள் ஆனாலும் மறக்காது. பிள்ளைகள் படிக்கும் போதும் மனம் ஒன்றிப் படித்தால் மறதி ஆகாது.

    ReplyDelete
  3. என்ன முதல்முதலா சந்திக்கிற எல்லாருமே "நீ ஏன் கவலையோட இருக்காய்" ன்னுதான் கேக்குறாங்க. என்னோட முகத்த கண்ணாடில பார்த்தாலும் கவலையாதான் இருக்கு. சந்தோசமான நிகழ்வு நடந்த கூட சில நொடிகள்தான் நான் சந்தோசத்த அனுபவிக்கிறன் அப்புறம் உடனே கவலை வந்து ஒட்டிக்குது. எனக்கு வயது 22. அரபு நாடு ஒண்ணுல வேலை பார்கிறேன். எனக்கு சில நண்பர்கள் இருந்தாலும் அவர்கள் கிட்ட நான் என்னோட தனிப்பட்ட விசயத்த பேசுறது இல்ல. நான் நாட்டில இருக்கும்போது கூட என்னோட குத்ம்பதவர்களோட நான் சிரிச்சி கலகலப்பா பேசினதே இல்ல தேவைன்னா மட்டும் பேசுவன் (எனக்கு 6 சகோதரி 2 சகோதரன் அப்பா இறந்திட்டாரு வீட்டில நான்தான் கடைசி பிள்ளை)சில நாட்களுக்கு முன்பு நான் காரணமே இல்லாம ரொம்ப கவலைப்பட தொடங்கிடன். தயவு செய்து எனக்கு என்ன பண்றதுன்னு சொல்லுங்க.

    I am from Sri Lanka

    ReplyDelete
    Replies
    1. இதற்கு நனவு காரணம் மற்றும் நனவிலி காரணம் உள்ளன. உங்கள் குடும்பம் விட்டு விலகித் தனியே தொலைவில் இருப்பதால் கவலை சூழ வாய்ப்பு உண்டு. இலங்கை தமிழர் என்பதால் சமூகப் பாதிப்பும் காரணமாகலாம். எதிர்காலத் திட்டங்கள் போட்டு (லட்சியம்) நிறைவேற்ற வழி இல்லாமல் போனால் கூடக் கவலை படரும். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று என்றால் கூட முகம் வாட்டத்தில் இருக்கும். இப்படிப் பல காரணங்கள் நனவுக்கு உள்ளன. இவ்வாறு இல்லை எனில் நனவிலிக் காரணம் இருக்கிறது என்று பொருள். நனவு அறியாத ஆழ் மனத்தில் பாதிப்பு எண்ணம் இருந்தால் அது உங்களை ஆட்டிப் படைக்கும். அந்தப் பாதிப்பு அனுபவம் என்ன என்பதை அறியவேண்டும். அமைதியாகக் கொஞ்சம் நேரம் சிந்தித்தால் கூட அதை நீங்களே ஊகிக்க முடியும். எந்தக் காரணம் இருந்தாலும் நம் மனத்தை ஒட்டு மொத்தமாக ஒரு குறிப்பிட்ட எண்ணத்திடம் ஒப்படைக்கக் கூடாது. கால் விரலில் அடிபட்டால் மற்ற உறுப்புகள் முடங்கிப் போய்விடுவதில்லை. காட்சியைக் கண்களும் சுவையை நாக்கும் இசையைக் காதும் இரசிக்கவே செய்கின்றன. உடலிடம் இருந்து மனம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.
      உலகம் பரந்து விரிந்தது. பயணத்திற்குப் பல வழிகள் உள்ளன. அனைவருக்கும் உலகம் ஒன்றுதான். இது சொர்க்கமாகவும் நரகமாகவும் விளங்க அவரவர் மனநிலையே காரணம். அகம் மாறினால் புறம் மாறும். இது உளவியல் உண்மை மட்டுமல்ல ஆன்மிக மெய்ம்மையும் கூட. இதன் படி சோகமான மன நிலையை நீங்கள் மாற்றிக் கொண்டால் உலகம் சொர்க்கமாகி விடும். எப்படி மாற்றுவது? முதலில் எதிர்மறை எண்ணங்களை விட்டு விலக வேண்டும். அதற்குத் தியானம் கைக் கொடுக்கும். அமைதியான சூழலில் மனத்தை ஒருமுகப் படுத்துவது தியானம் ஆகும். இதில் வெற்றி பெற்றுவிட்டால் நேர்மறை எண்ணங்கள் தானாக வளர்ந்து விடும். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்.. ஆடம்பரமோ ஆரவாரமோ உண்மையான மகிழ்ச்சி அல்ல. மன அமைதிதான் உண்மையான நிலையான மகிழ்ச்சி ஆகும். தேவைகளைச் சுருக்கிக் கொள்ளுதல், தன்னைச் சார்ந்திருத்தல் ஆகியவை மன அமைதிக்கு வழி வகுக்கும்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. எனக்கு வயது 28, பெண் சாதாரண நடுத்தர குடும்பம். உணவு,உடை, படிப்பு தரமுடிந்த நடுத்தர குடும்பம்.. சிறுவயதிலே பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளேன். அதில் எனக்கும் விருப்பம் இருந்திருக்கிறது அதை இப்போது உணர்கிறேன். வளர்ந்தபின் காதலில் விழுந்தேன். 23 வயதில் காதலனுடன் தொடர்பு. அப்புறம் சில சூழலில் பிரிந்தோம். எதோச்சையாக தோழியின் கணவனுடன் பழக்கம், அவனுடனும் உடல்ரீதியாகத் தொடர்பு. அப்புறம் புரிவு. அப்புறம் இன்னொரு தோழியின் கணவனும் பால்ய நண்பனுடன் தொடர்பு, உறவு, பிரிவு. அப்புறம் மீண்டும் ஒரு காதல் போல ஒன்று, அவனின் வசதி கண்டு திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என எண்ணி பழக்கம், உறவு. முதல் முறையாக செய்து கொண்டிருப்பது தவறு என நான் எண்ணியது இங்கே தான். அப்புறம் மன உளைச்சல், குற்றவுணர்வு, பெற்றோர், நம்பிக்கையானவ்ர்களுக்கு துரோகம் செய்த எண்ணம் என எல்லாம் என்னை வாட்டுகிறது. சிறப்பாகச் செயல்படமுடியவில்லை. நன்கு படித்துள்ளேன், நல்ல வேலையை எதிர்பார்த்து காத்துள்ளேன். எனது பலவீனம் காமம். இந்த சூழலில் திருமணம் வேண்டாம் என நினைத்திருந்தேன். தவிர்த்து வந்தேன், ஆனால் நல்லவரன் எவ்வளவு பேசியும் பிரயோஜனமில்லை, முடிவு செய்துவிட்டார்கள். எனது எண்ணங்கள் சுதந்திரமானவை, வேறெந்த கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை. அளவாகப் பேசுவேன், முடியுமென்றால் பிறருக்கு உதவுவேன். யாரைப்பற்றியும் குறைசொல்லமாட்டேன். ஆனால் எனக்குள் இப்பொழுது பயம், அதீத பயம். தற்கொலை எண்ணமெல்லாம் எனக்கு துளியும் கிடையாது, வரனை எனக்கும் பிடித்துள்ளது. ஆனால் என் முடிவுகள் இந்த சூழலில் சரியா என்ற கேள்வி?, இழ்ந்துவிட்ட என் கற்பை எப்படி கணவணிடம் நிருப்பிக்கப் போகிறேன்?. கல்யாணத்தை தடுக்க முடியாது, அதில் எனக்கும் முழு விருப்பம் இல்லை. ஆனால் என்ன செய்யட்டும்?, தூங்கமுடியவ்ல்லை காரணம் பயம், கற்பில்லை என்ற உணர்வு, முன்னால் தொடர்பில் இருந்த ஆண்களைப் பற்றி இப்பொழுது புதிதாகப் பயம் வந்துள்ளது அவர்கள் மீது எனக்கு?, உணர்வுகள் காரணமாக தவறு செய்துவிட்டேன், என்னை திருத்திக்கொள்ள நினைக்கிறேன்? கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறேன்? இரண்டும் நடக்குமா?, ஆசைப்படுகிறேன், முடிவெடுக்கத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? ஆலோசனைக் கூறமுடியுமா?, மற்றவர்கள் மீதும் எனக்கு சந்தேக எண்ணம் வருகிறது. இதற்கெல்லாம் நான் என்ன செய்யவேண்டும். மற்றவர்களிடம் சொல்ல பயம். நெருங்கிய தோழிகளுக்குச் சில விசயங்கள் தெரியும். ஆனால் நான் கெட்டுப்போனது எனக்கும் அந்த ஆண்களுக்கும் தெரியும். திருந்தி நல்லபடியாக ஒழுங்காக கணவனுடன் வாழ நினைக்கிறேன். என்ன செய்யவேண்டும்.

    ReplyDelete
  5. sir, i know u very well sir. im the last posted girl. sir, please reply me as soon as possible. because i have no time because of my marriage fixing going on fast, i reply to all my family members. if you giving any guidelines to me i will agree and following. thank u sir

    ReplyDelete
  6. தற்காலத்தில் சிலர் (பிற்காலத்தில் பலர்) சந்திக்கின்ற உளப்பிரிச்சினை பற்றியதே உங்கள் அனுபவக் கேள்வி. பாலியல் வாழ்வில் நீங்கள் கண்ட ஈடுபாடு இயல்பானதா அல்லது குற்றமுள்ளதா என்பதுதான் உங்கள் குழப்பத்திற்குக் காரணம். அந்த குழப்பம்தான் பயத்தையும் சந்தேகத்தையும் எழுப்புகின்றது. தற்போது நீங்கள் திருந்திவிட்டாலும் கடந்த கால பாதிப்புகள் எதிர்காலத்தைப் பாதித்துவிடுமோ என்கிற பதற்றம் உங்களிடம் உள்ளது. ஒரு முடிவு எடுக்கவிடாமல் மனதை இது நிலைகுலையச் செய்துவிடுகிறது. அதாவது கடந்த கால மற்றும் எதிர்க் காலப் பிடியில் சிக்குண்டு உங்கள் நிகழ்காலம் தவிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இதிலிருந்து விடுபட பாலியல் பற்றிய புரிதல், தெளிவு உங்களுக்கு வேண்டும்.

    மேலோட்டமாகப் பார்த்தால் மற்றத் தேவைகளைப் போல் பாலுணர்வும் ஒன்று. ஆனால் கொஞ்சம் நுண்நோக்கினால் மற்ற உடற்தேவைகளைக் காட்டிலும் பாலுணர்வு ஆழமானதும் வலிமையானதுமாக இருப்பதை உணரலாம். பசி, தாகம் முதலியவை வாழ்நாள் முழுவதும் சீராக இருக்கும். அப்படி சீரில்லாமல் போனால் உடல் நோய் என்று மருத்துவம் பார்க்கப்படும். மாறாக, பாலுணர்வு வாழ்நாள் முழுவதும் சீராக இருக்காது. குறிப்பாக, பருவ வயத்தில் இதன் வீரியம் மிகுதி. காரணம் இனப்பெருக்கத்திற்காக இயற்கை செய்த ஏற்பாடு இது. இந்த இனக்கவர்ச்சி இயற்கையானதே. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் எதுவும் இயற்கை அல்ல. அதாவது கற்பு இயற்கை அல்ல. இதன்படி நீங்கள் இயற்கையாக தான் உறவாடினீ ர்கள். சமூகப் பண்பாடுதான் அந்த உறவுகளைக் குற்றமாகப் பார்கிறது. இயற்கை பற்றிய அக்கறை சமூக உணர்வுக்குக் கிடையாது. குழந்தை பருவத்திலிருந்து நம்முள் பண்பாடு திணிக்கப் படுவதால் சுயத்தை இழந்து வாழவேண்டி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் பண்பாட்டுக்காக (குடும்பம்,சமூகம் ) சுயத்தை நாம் தியாகம் செய்ய வேண்டி உள்ளது. ஹார்மோன் வேகத்தில் உள்ளவர்களில் சிலர் இதற்குத் தயாராக இருக்க முடிவதில்லை. அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்துள்ளீர். ஹார்மோன் வேகம் இருக்கும் வரை நம்முள் பொதிந்துள்ள பண்பாட்டு எண்ணம் தலைத்தூக்காது. அதன் வேகம் குறையத் தொடங்கினால் நம்மைப் பண்பாடு அதிகாரம் செய்யத் தொடங்கி விடும். அதுதான் தற்போதைய உங்கள் பிரிச்சினை. பழைய உங்கள் இயல்புகள் எல்லாம் பண்பாட்டு நோக்கில் தற்போது குற்றங்களாகத் தெரிகின்றன. அப்படித் தெரிகிறதே அன்றி குற்றங்களல்ல என்பதை அறியவும். நீங்கள் வெளிப்படையாகப் பலருடன் உறவாடினீர். மற்றவர்கள் உள ரீதியாக உறவாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். குறைந்த பட்சம் கனவுகளில்..! உங்கள் குற்றம் உலகப் பொதுவானது. அதாவது மனிதர்கள் அனைவருக்கும் இந்தக் குற்ற உணர்வு இருக்கிறது. பண்பாட்டு வலிமை பொருத்து இக்குற்ற உணர்வின் வலிமை இருக்கும். மேலை நாடினரை விட நம் நாட்டில் இதன் வலிமை மிகுதி. எனவே குற்ற உணர்வு பற்றிக் கவலைபடத் தேவை இல்லை. உள ரீதியில் கற்புள்ள ஆணோ பெண்ணோ மனித இன வரலாற்றில் இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் கற்பு என்பது திருமண வாழ்வுக்கு உரியதே ஒழிய திருமணம் முந்தைய வாழ்வுக்கு உரியதல்ல. சங்க கால இலக்கியங்கள் சான்று. களவு என்பது திருமணம் முந்தையது. கற்பு என்பது திருமணம் பிந்தியது. திருமணம் முன் பாலியல் உறவு கொண்டதை பல சங்கப் பாடல்கள் சான்று கூறுகின்றன. களவு என்றால் திருட்டுத் தனம். அக்காலத்தில் இயற்கையோடு வாழ்ந்தனர் என்பதற்கு இது சான்று.

    எனவே உங்கள் அச்சம்,பதற்றம் இயற்கைபடி அர்த்தமற்றது. குறிப்பிட்ட பருவ காலத்தில் ஏதோ வேகத்தில் நடந்ததை நினைத்து நீங்கள் குறுக வேண்டியதில்லை. மற்றவர் மீது அச்சம் ஐயம் தேவை இல்லை. உள ரீதியில் அவர்களும் உங்களைப் போன்றவர்களே. இப்போது உங்களுக்குத் திருமணம் நடக்கப் போகிறது. இங்கிருந்து தான் நீங்கள் கற்பை காக்க வேண்டும். அதுதான் உண்மையான கற்பு வாழ்வு. மற்றவர்கள விட உங்களுக்குத்தான் மண வாழ்வில் தெளிவு இருக்கும். எனவே உடனடியாக மணவாழ்வில் ஈடு படுங்கள். நிச்சியமாக உங்கள் மணவாழ்வு வெற்றிபெறும் என்பது என் நம்பிக்கை. வாழ்த்துகள்..!

    ReplyDelete
  7. dear sir,
    i'm masturbating long years. so i will not do other works.is there have any treatments to stop this give some suggestion...
    thank u....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வயதையும் வாழ்நிலையையும் குறிப்பிடவில்லை. பரவாயில்லை. சுயஇன்பம் ஒரு பொது பிரிச்சினை என்பதால் பொதுப்படையாகவே விளக்க வருகிறேன். உளப் பிரச்சினையிலிருந்து விடுபட அதைப் பற்றிப் புரிந்துகொள்வதே முதன்மையான மாற்று மருந்தாகும். சுய இன்பத்திற்கு நனவு மனம், நனவிலி மனம் என இரண்டு காரணிகள் உள்ளன. நனவுக் காரணியில் உடல் சார்பு முதன்மையாக உள்ளது. . நனவிலிக் காரணியில் உளச் சார்பு முதன்மையாக உள்ளது. இரண்டில் நனவிலிதான் வலிமையானது. இது குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பாதிப்புப் பொருத்தது. இந்தப் பாதிப்புக் குறிப்பிட்ட புலனின்பத்தில் தேங்க வைக்கிறது. எந்த உறுப்பில் அல்லது புலனின்பத்தில் மனம் அதிகக் கவனம் செலுத்துகின்றதோ அது அடிமைப் பழக்கத்திற்கு உரியதாகின்றது. பெரும்பாலும் வாய் வழி இன்பம் அடிமைப் பழக்கத்திற்கு ஆட்படும். ஒரு வயத்தில் பால் மாந்துகிற போது அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் ஏற்படுமானால் வாய்வழி இன்பத்தில் குழந்தை தேக்கம் கொள்கிறது. இதன் பிற்கால வெளிப்பாடாக புகைப் பழக்கம், மதுப் பழக்கம், வெற்றிலை, பீடா பழக்கம் முதலிய வாய் அடிமைக்கு அவன் ஆளாகின்றான். அடுத்தது மூன்று வயதின் போது பாலுறுப்பில் கை வைத்து விளையாட முற்படும் வேளையில் (பெற்றோர் அச்சுறுத்தல் வழி ) பாதிப்பு ஏற்படின் பாற்குறி சுயஇன்பம் பெற்றமைகிறது. இந்த குழந்தைப் பருவ பாதிப்பு உள ஆழத்தில் உள்ளதால் வலிமையாக விளங்குகிறது. மாறாக நனவு காரணி அவ்வளவு வலிமையாக இருக்காது. இது பருவம் எய்திய பிறகு ஏற்படும் ஹார்மோன் கோளாறு வழி வந்ததாகும். ஹார்மோன் அடங்கும் வரை இது தொடரும். பிறகு படிப்படியாகக் குறையும். இவ்விதச் சுய இன்பத்திற்கு தூண்டு கோலாக உடல் இருக்கிறது. எனவே நனவு நிலையிலேயே ஒருவரால் கட்டுப் படுத்த முடியும். மாறாக நனவிலி நிலை சுய இன்பத்தை ஆழமான புரிதலால் மட்டும் கட்டுப்படுத்த முடியும். மேலும் யாரிடம் எந்தக் காரணி இருக்கும் என்று சொல்ல முடியாது. இரண்டும் கலந்துகூட இருக்கலாம்.



      இவற்றிலிருந்து விடுபட என்ன வழி? ஒன்றைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ளுங்கள் ... பாலுணர்வு தான் மனோ சக்தி. இந்திய தத்துவம் தொடங்கி ஃப்ராய்ட் வரை ஆணித்தரமாக முன்வைக்கும் கருத்து இது. தந்த்ரா என்று இந்திய தத்துவம் கூறுவதை லிபிடோ என்பார் ஃப்ராய்ட். இரண்டும் பாலியல் சார்ந்த மனோ சக்தியைக் குறிக்கும். பால் சக்தியை விரயம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் நினைத்த காரியம் ஈடேராது. முக்தி அடைய நமது சித்தர்கள் துறவு சென்றதற்கு இதுதான் காரணம். சாமான்ய மனிதர்களான நாம் அந்தளவுக்கு செல்லத் தேவை இல்லை. இருப்பினும் சமூக வாழ்வில் நாம் சாதிக்க நம்முள் லிபிடோ என்றென்றும் தேவைப் படுகின்றது. கற்புடை பாலுறவால் லிபிடோ ஆற்றல் கூடும். பரத்தைமை, சுய இன்பம் ஆகியவற்றால் மனோசக்தி குறையும். இதனால் குறிக்கோளை அடைய முடியாமல் போய் விடும் நிலை ஏற்படும்.

      உங்களுக்கு நிச்சியம் குறிக்கோள் இருக்கும். அதை அடைய வேண்டின் சுய இன்பத்தைத் துறக்க வேண்டும். நினைத்ததை சாதிக்காமல் நீங்கள் தள்ளாடிக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். உணவு, தொலைக்காட்சி, திரைப் படம், போதைப் பழக்கம் முதலிய வற்றில் அதிக ஈடுபாடு கொண்ட நபர்களால் சாதிப்பது கடினம். எதிரிகளைக் கூட சமாளிக்க முடியாது. சுய இன்பப் பழக்கம் பிறவற்றை விட மோசமானது. இது நரம்பு மண்டலத்தையே வலுவிழக்கச் செய்யும். ஒட்டுமொத்த மனத்தைப் பாற்குறி மீது குவியச்செய்து விடும். அதனால் மற்ற செயலில் கவனம் செலுத்தாமல் போய்விடும். இந்த நிலைதான் உங்களுக்கு உள்ளது. இதைப் புரிந்துக் கொள்ளுங்கள். சாதிக்க வேண்டும் என்று நினையுங்கள். 'நான் நன்றாக வாழ வேண்டும்' என்று பேரவா கொள்ளுங்கள். இந்த எண்ணம் வலுப்பெற யோகா செய்யுங்கள். குறிப்பாக வஜ்ஜிராசனம் நாளும் காலை 15 நிமிடம் (படிப்படியாக) செய்யுங்கள். நரம்பு மண்டலம் வலுப் பெரும். தொடர்ந்து மனம் வலிமை பெரும். இப்போது உங்கள் குறிக்கோள் நோய்ப் பிடியிலிருந்து விடுபடுவதாக இருக்க வேண்டும். கடைசியாக, நம் உடலை நாம்தான் பேண வேண்டும். நம்மை நேசித்தல் இது நிச்சியம் நடக்கும்.

      Delete
  8. ஐயா, வணக்கம்.
    ஏற்கனவே கேள்வி கேட்ட அதே 28 வயது பெண் தான். என்னை மலர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறேன். தங்களுக்கு உடனடியாக நன்றி கூறமுடியவில்லை..... மிக்க நன்றி ஐயா. தங்கள் பதிலால் தெளிவடைந்து வருகின்றேன்.
    மேலும் சில ஐயங்கள்
    குழப்பங்கள், கேள்விகள் உண்டு
    சிறுவயதிலிருந்தே நான் கோபக்காரியாக வளர்ந்து வருகிறேன்..
    உறவு, நட்புகளில் நடக்கும் நிகழ்வுகளை ஆழமாக யோசித்து குற்றம் கண்டு சண்டை போடுகிறேன், பேச மறுக்கிறேன், என்னை நானே மனதால் வதைத்துக் கொள்கிறேன். நானே நடக்காத சோகங்களைக் காட்சிப்படுத்தி அழுகிறேன்,
    இன்னும் திருமணம் நடக்கவில்லை விரைவில் நடக்கவிருக்கிறது.
    அவருடன் மன அளவில் இப்போது நெருங்கியுள்ளேன் ஆனால் உடலளவில் நெருக்கம் காட்ட பயமாகவுள்ளது.. ‘உண்மை என்றாவது ஒருநாள் வெளிவரும்' என்ற கருத்து என்னை கோழையாக்கி, பயத்தில் உறைய வைக்கிறது.
    அதோடு அவரும் என்னைப் போல இருந்திருப்பாரோ என்ற சந்தேகம் என்னை வாட்டுகிறது,
    உடலால் கெட்டிருந்தால் கூட யாரையும்( நட்பு, காதல், குடும்பம்) ஏற்றுகொள்வேன் போல ஆனால் அவர்கள் மனதில் இன்னொருவர் அதாவது ஒரு குழந்தையைப் பிடிக்கும் என்றால் கூட அந்த குழந்தை மேல் எனக்கு வெறுப்பு வருகிறது கோபம் வருகிறது. என் வெறுப்பை வெளிக்காட்டுகிறேன்
    யாராக இருந்தாலும் என்னிடம் ஏதாவதும் கேட்டால் அது முடியுமென்றால் உடனே செய்திடுவேன் ஆனால் எனக்கு எதுவும் உடனே கிடைப்பதில்லை, இதுவரை எல்லாவற்றிலும் அப்படித் தான் நடக்கிறது ஏன்? என்னிடம் எது பிழை?
    என்னைப் பற்றிய பிறர் விமர்சனம் நான் கோபக்காரி என்பது தான். ஆனால் ஏன் பல விசயங்கள் நான் விரும்புவது போலில்லை?
    செக்ஸ் சார்ந்த பிறர் நிகழ்வுகளை மன்னிக்கிறேன், ஏற்கிறேன். ஆனால் அவர்கள் மனதில் நான் தான் முதலில் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்?
    சில நேரம் என் தவறுகள் புரிந்தும் செயல்பட மறுக்கிறேன், அதீத கோபம் வருகிறது கடுமையான, கெட்டகெட்ட வார்தைகளையும் உபயோகிக்கிறேன். ஏன்?
    பல நேரங்களில் கடுமையான மன நிலையோடு இருக்கிறேன். கடுமையாகத் தான் எதையும் ஆரம்பிக்கிறேன்.
    என் மனம் அதிகமாக அசைபோடுவது, உறவுகளில் நான் இழந்திவிட்ட அன்பை, அந்த தருணத்தைத் தான்.
    எனக்குள் நிலவி வரும் என்போல் தான் பிறர் வாழ்வும் இருந்திருக்குமா? என்ற சந்தேகத்தை என்ன செய்வது? இந்த சந்தேகப் பட்டியலில் இல்லாதவர் இல்லை.. என் தாய் உட்பட.
    எப்படி என் குறைகளைப் போக்குவது?
    என்னை நான் திசை திருப்ப உதவும் ஒரே மாற்று பயணமும், புது இடமும் புது மனிதர்களும் தான். வேறு எதுவும் என்னை ஆசுவாசபடுத்தமாட்டேன் என்கிறது.ஆனால் இதற்கு என் சூழலும் பொருளாதாரமும் ஒத்துக்கொள்ளாது. என்ன செய்வது?
    என் வருங்கால கணவனை சந்தேகிக்கிறேன், இதுவரை அவர் அதை ஒரு மிகக் குறைந்தபட்சமாவதும் உணர்ந்திருப்பார். இப்போது என்ன செய்வது? ஒருவேளை அவர் என்னை சந்தேகப்பட்டால்? என்னிடம் பதிலே இல்லை.
    நானும் என் கணவனும் என் தோழியும் ஒன்றாக நடந்தால், அவளும் அவரும் அருகில் சில நேரம் ஒன்றாக நடந்தால் உடனே கவனிக்கிறேன், உள்ளுக்குள் கோபம் ,சந்தேகம் ,ஆத்திரம் எல்லாம் வருகிறது. நானொரு முழு சந்தேகப் பேர்வழி, ஆனால் அதை நேரடியாக வெளிக்காட்டாமல் வருகிறேன், உண்மை வெளிவந்தால் நான் மிருகமாக இருப்பேனோ என என்னை நினைப்பார்களோ அதனால் என்னை நானே வெறுக்கிறேன், பயமாக உள்ளது, எப்படி என்னை திருத்திக் கொள்வது?
    என் சந்தேக புத்தி, முன் கோபம், அதிக எதிர்பார்ப்பு வைத்து ஏமாறுவது, மனதால் என்னை நானே சாகடித்துக் கொள்வது, அதிகமாக சோகத்தைக் கற்பனை செய்வது, எங்கேயாவதும் நானோ பிறரோ போகும்போது ஆக்ஸிடெண்ட் ஆவது போல் சிறுவயது முதலே கற்பனை செய்து வருவது, ஒரு சில பெண் தோழிகளைப் புணர நினைப்பது, சில நேரங்களில் விதவிதமாக மற்றவரைத் துன்புருத்த கற்பனை மட்டும் செய்வது
    இதெல்லாம் ஏன்? எது என்னை மாற்றும்? கட்டுப்படுத்தும்?, எனக்கு மனநோய் உள்ளதா? என்னை திருத்திக் கொள்ள விரும்புகிறேன் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. ஓமியோபதி மருந்துக் கடையில்
      Holly , Aspen
      ஆகிய இரண்டு மருந்துகளை 2 dram pills எனக் கேட்டு வாங்கவும்.
      அவற்றை 3 வேலை உணவுக்கு 1/2 மணி நேரம் முன் எடுத்துக் கொள்ளவும். ( உண்பது எப்படி என்று கடைக் காரிடம் தெரிந்து கொள்ளுங்கள்). ஒரு வாரம் கழித்து மாற்றத்தைத் தெரிவிக்கவும். பிறகு உங்கள் பிரிச்சினைப் பற்றி விவாதிப்போம்.

      எனது 'உளவியல் ஆலோசனை' பலவற்றை face book இல் தொடர்ந்து தெரிவித்து வருகின்றேன். ravichandran .psychology . இப்பக்கம் உங்களுக்கு தெளிவு தரும் . உடனே வாசிக்கத் தொடங்கவும்.

      Delete
  9. manam yethanaal seyappattathu. mind is made by which meterial

    ReplyDelete
  10. memorycard made by some one. mind made by which one

    ReplyDelete
  11. ஐயா எனக்கு காரணமில்லாமல் பயம் வாட்டி வதைகிறது இனம் புரியாத பயம் .நான் என்ன செய்வதென்று தெரியவில்லை எனக்கு உதவுங்கள் .

    ReplyDelete
  12. Sir my name is Mathesh 31 yr old i have heart attack death fear i con't control that if i heard heart attack new immidiatly fear coming solution pls ..in tamil

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. பழைய நினைவுகள் மறைப்பதற்கான வழிகள் உண்டா , துன்ப நினைவுகள் மறக்கவே இயலவில்லை. உதவுங்கள்

    ReplyDelete

உங்கள் உளவாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்துக் கேள்வி கேட்கலாம். இனியும் தயக்கம் வேண்டாம். உளவியல் ஆன்மிகம் தொடர்பான பொது ஐயங்களையும் கேட்கலாம் ...